குடிநீர் குழாயில் கசிவு

நஞ்சப்பா பள்ளி அருகே குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

Update: 2021-10-07 18:23 GMT
திருப்பூர்
நஞ்சப்பா பள்ளி அருகே குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. 
குடிநீர் பிரச்சினை 
திருப்பூர் மாநகரில் 60 வார்டுகள் உள்ளது. பனியன் தொழில் பிரதான தொழிலாக திருப்பூரில் இருந்து வருவதால், இந்த தொழிலை பலர் செய்து வருகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மாநகரில் வசித்து வருகிறார்கள். மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மாநகர் பகுதிகளில் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. 
இந்த பிரச்சினையின் காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாநகர் பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் வீணாகி வருவது பலரையும் கவலையடைய செய்துள்ளது. 
நடவடிக்கை 
திருப்பூர் காதர்பேட்டை அருகே நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ராயபுரம் செல்லும் சாலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளால், கசிவின் காரணமாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இந்த குடிநீர் அந்த பகுதியில் சாலையில் தேங்கி நிற்கிறது. 
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் குழாயில் அடிக்கடி இவ்வாறு கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. பல இடங்களில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதனை விரைவாக சரி செய்து, மீண்டும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்