ரத்தினகிரி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி

ரத்தினகிரி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி

Update: 2021-10-07 18:02 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு அடுத்த மோட்டுராமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி கலைமகள் (வயது 25). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று காலை கலைமகள் தனது 4 வயது மகனுடன் நிலத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் கலைமகள் மிதித்துள்ளார். மின்சாரம் தாக்கி திடீரென தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கலைமகள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 

தகவல் அறிந்ததும் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைமகளின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்