வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்டது.

Update: 2021-10-07 17:48 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்தவர் தில்சத் பேகம். இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தில்சத் பேகம் வீட்டை பூட்டிவிட்டு தன் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கணேஷ் நகர் போலீசாருக்கும், தில்சத் பேகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த தில்சத்பேகம், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடி ெசன்றது தெரியவந்தது. இதுகுறித்து தில்சத்பேகம் கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மாதிரிகள் எடுக்கப்பட்டது. மேலும் திருடுபோன வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் உள்ள பதிவை ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் 7 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்