கடை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அபராதம்

கடை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அபராதம்

Update: 2021-10-07 14:58 GMT
பேரூர்

கோவையை அடுத்த பேரூர் அருகே நொய்யல் ஆற்று படித்துறையில் நேற்று முன்தினம் மகாளய அமாவாசை வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. 

ஆனால், தடையை மீறி படித்துறையில் குவிந்த பக்தர்கள் நொய்யல் ஆற்றில் இறங்கி வழிபாடு செய்தனர். 


அவர்களை வருவாய்த்துறை அதிகாரிகளும், பேரூர் போலீசாரும் திருப்பி அனுப்பினர். 


இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செயல்பட்ட ஆற்றங்கரையில் உள்ள கடை உரிமையாளர்கள் சந்திரன், மகேந்திரன் மற்றும் 

தடையை மீறி திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்திய சந்தானம்ஐயர் ஆகிய 3 பேருக்கு பேரூர் தாசில்தார் ரமேஷ் தலா ரூ.500 அபராதம் விதித்தார். 

மேலும் செய்திகள்