ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் ஆலை

ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் ஆலை

Update: 2021-10-07 14:55 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் பிரதம மந்திரி நிதியின் கீழ் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலைகளை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. ஆக்சிஜன் ஆலைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் 1000 லிட்டர் ஆக்சிஜன் ஆலையை பி.ஆர்.நடராஜன் எம்.பி., மாவட்ட கலெக்டர் சமீரன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் ஆக்சிஜன் திறன், அதன் பயன்பாடு குறித்து டீன் நிர்மலாவிடம் கேட்டறிந்தனர்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், 1000 லிட்டர் ஆக்சிஜன் ஆலை யில் இருந்து 50 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் தொடர்ந்து பல மணி நேரம் சிகிச்சை அளிக்கலாம். கொரோனா 3-வது அலை தாக்கினாலும் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்காது என்றனர்.

மேலும் செய்திகள்