பாஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

பாஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-10-07 14:49 GMT
கோவை

கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க கோரி, கோவை தண்டுமாரியம்மன் கோவில் முன்பு பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்கக்கோரி பா.ஜனதா கட்சி சார்பில் கோவை அவினாசி ரோடு தண்டு மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். 

தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், எஸ்.ஆர்.சேகர் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

சாமி வேடம் அணிந்து வந்தனர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அனைத்து நாட்களிலும் கோவில்க ளை திறக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலர் சாமி வேடம் அணிந்து மேளதாளத்துடன் வந்து ஆடி பாடி கோவிலைத் திறக்க வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்