மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ.40 லட்சம் கடன் உதவி

மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ.40 லட்சம் கடன் உதவி

Update: 2021-10-07 13:40 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தியாளர் மற்றும் தொழில் குழுக்கள், சமுதாய திறன் பள்ளிகள், சமுதாய பண்ணை பள்ளிகள் தொடங்குவது குறித்த கலந்தாய்வு கூட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். 

அதன் பின்னர் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் 63 சுய உதவி குழுவை சேர்ந்த மகளிர் தொழில் முனைவோர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான திட்ட கடன் உதவிகளை வழங்கினார். விவசாய உற்பத்தியாளர்களை குழுவாக ஒன்றிணைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், உபரி விளைபொருட்களை திரட்டவும், உற்பத்தி செலவை குறைத்து வருமானத்தை பெருக்கவும், மதிப்புக்கூட்டு பொருட்களை உருவாக்க உற்பத்தியாளர்களை அமைப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் வாழ்வாதாரம் ஏற்றம் பெற, நீடித்த நிலையான வருமானம் பெற வழிவகைகள் குறித்து தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் மணிகண்டன் விளக்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்