கர்நாடகத்தில் 26 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை
கர்நாடகத்தில் 26 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 898 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 79 ஆயிரத்து 331 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 621 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 29 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரு நகரில் 205 பேர், தட்சிண கன்னடாவில் 43 பேர், மைசூருவில் 62 பேர், துமகூருவில் 28 பேர், ஹாசனில் 50 பேர், உடுப்பியில் 16 பேர், உத்தரகன்னடாவில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 2 பேரும், தட்சிண கன்னடாவில் ஒருவரும், மைசூருவில் 5 பேரும் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் நேற்று 26 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.