கார் மோதி சிறுவன் படுகாயம்

கார் மோதி சிறுவன் படுகாயம் அடைந்தான்.

Update: 2021-10-06 18:48 GMT
தோகைமலை,
தோகைமலை அருகே உள்ள சின்னரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜோதிவேல். இவருடைய மகன் தரணிஸ் (வயது 8). இந்தநிலையில் ஜோதிவேல் தனது மகனுடன் அப்பகுதியில் உள்ள பஸ்நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று சிறுவன் தரணிஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மணப்பாறை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஜோதிவேல் கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த மாதவன் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்