ஊட்டி
ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிளஸ்-1 படிக்கும் மாணவி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. அந்த மாணவியுடன் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பழகி வந்தான்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோர் அவரை டாக்டரிடம் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, அவரை அந்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததை கூறினாள்.
இதுகுறித்து ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.