திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-10-06 04:17 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று முன்தினம் உத்தரபிரதேசத்தில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியானார்கள். ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார்களை ஏற்றியும், துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அவர்கள் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் உள்பட 20 பெண்கள், 25 ஆண்கள் என மொத்தம் 45 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்