கிருஷ்ணகிரி அருகே விவசாயி தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள செம்படமுத்தூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39), விவசாயி. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மன வேதனையில் வீட்டில் தூக்குப்போடடு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.