சிற்றார்-1 அணைப்பகுதியில் 7 செ.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சிற்றார்-1 அணைப்பகுதியில் 7 செ.மீ. அளவுக்கு மழை பதிவானது. பேச்சிப்பாறை அணையில் இருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சிற்றார்-1 அணைப்பகுதியில் 7 செ.மீ. அளவுக்கு மழை பதிவானது. பேச்சிப்பாறை அணையில் இருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மழை
வங்க கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இதேபோல நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
7 செ.மீ.பதிவு
பேச்சிப்பாறை அணை- 49.6 (5 செ.மீ.), பெருஞ்சாணி அணை- 18.8, புத்தன் அணை- 17.4, மாம்பழத்துறையாறு- 6, சிற்றார் 1- 70 (7 செ.மீ.), சிற்றார் 2- 21.6, முக்கடல் அணை- 2.7, பூதப்பாண்டி- 3.2, களியல்- 20, கன்னிமார்- 6.4, குழித்துறை- 22, நாகர்கோவில்- 2, சுருளக்கோடு- 41.4, தக்கலை- 3.5, பாலமோர்- 16.2, கோழிப்போர்விளை- 5, அடையாமடை- 14, முள்ளங்கினாவிளை- 8, ஆனைக்கிடங்கு- 4.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக சிற்றார்-1 அணைப்பகுதியில் 7 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
இந்த மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து மீண்டும் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி இந்த அணையின் நீர்மட்டம் 43.94 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1174 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசன மதகுகள் வழியாக வினாடிக்கு 378 கன அடி தண்ணீரும், உபரிநீர் மதகுகள் வழியாக வினாடிக்கு 368 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 67.36 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 570 கன அடி தண்ணீர் வருகிறது.
குளம்போல் காட்சி அளிக்கும் அணை
சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 16.89 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 498 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் பாசன மதகுகள் வழியாகவும், வினாடிக்கு 268 கன அடி தண்ணீர் உபரிநீர் மதகுகள் வழியாகவும் திறந்து விடப்படுகிறது. பொய்கை அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை. திறப்பும் இல்லை. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 26.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் பகுதியாக குறைந்துள்ளதால் அணை வறண்டு குளம்போல் காட்சி அளிக்கிறது.