கொரோனா தடுப்பூசி முகாம்
அருப்புக்கோட்டையில் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
பந்தல்குடி கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கலைமகள் கல்வி குழுமத்தின் சேர்மன் பெருமாள் தலைமை தாங்கினார். .கல்விக் குழுமத்தின் மேலாளர் மாரிக்கண்ணு, கல்லூரி முதல்வர் சங்கரழகு முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் பந்தல்குடி அரசு மருத்துவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். மருத்துவக் குழுவினர் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். இதில் பேராசிரியர்கள்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.