அவினாசி,
அவினாசி அருகே உள்ள கந்தம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் வசிப்பவர் பட்டான் (வயது65). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு அவினாசி சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்தது. இதையடுத்து பட்டான் வீட்டின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பட்டான் மற்றும் அவரது மகள் கருணாம்பாள் (வயது 21)ஆகியோர் வீட்டின் அறைக்குள் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தனக்கு மாற்றுவீடு கட்டித்தர வேண்டி பட்டான் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து வருவாய் துறையினர் இடிந்துவிழுந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்