அச்சரப்பாக்கம் மழை மலை மாதா கோவில் தேர்த்திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பள்ளிப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள மழை மலை மாதா ஆலயத்தில் தேர்த்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 4 நாட்கள் நடந்தது.

Update: 2021-10-05 11:44 GMT
விழாவில் நற்கருணை, மற்றும் திருப்பலி வழிபாடுகள் தினந்தோறும் காலை, மாலை நடந்தது. 3-ம் நாள் தேர்த்திருவிழா நடைபெற்றது. தேர்த்திருவிழாவில் ஊரடங்கு விதிகளை பின்பற்றி ஊர்வலம் இல்லாமல் ஆலய வளாகத்திலேயே பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.

4-ம் நாள் காலை மழை மலை மாதா தேர் ஆலயத்தை வந்தடைதலும், சிறப்பு திருப்பலிகளும், மாலை கொடி இறக்கமும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மழை மலை ஆலய அதிபர் ஆர்.லியோ எட்வின் தலைமையில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.

மேலும் செய்திகள்