கோவையில் பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு

கோவையில் பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு

Update: 2021-10-04 18:29 GMT
கோவை

கோவை காந்திபுரம் காவலர் குடியிருப்பில் பெண் போலீசின் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 
பெண் போலீஸ்

கோவையை அடுத்த சூலூரை சேர்ந்தவர் இந்திராணி (வயது 46). இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் காந்திபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர்  வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான சூலூருக்கு சென்றார். பின்னர்  வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

நகை திருட்டு

உடனே அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. அதில் இருந்த ஒரு பவுன் மோதிரம், 3½ பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை காணவில்லை. 

அதன் மதிப்பு ரூ.1¼ லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படு கிறது. அவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து இந்திராணி காட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

அத்துடன் அவர் வீட்டில் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பாதுகாப்பு மிகுந்த காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

மேலும் செய்திகள்