கொரோனாவுக்கு பெண் பலி

கொரோனாவுக்கு பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-10-03 20:23 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 7 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 89 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 94 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்