வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-10-02 19:15 GMT
கரூர்,
கரூர் வெங்கமேடு அருகே உள்ள காதப்பாறை அன்பு நகரை சேர்ந்தவர் மன்மதராஜன் (வயது 36). இவர் அட்டை பெட்டி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கம்பெனிக்கு சென்று விட்டார். மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 1½ பவுன் தங்க காசு ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் மன்மதராஜன் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்