புழல் சிறை கைதி சாவு
பண மோசடி வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்( வயது 65). இவர், 2002-ம் ஆண்டு பண மோசடி வழக்கில் புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் அவர் இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவந்தார்.பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்டு மாதம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டு, சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கைதி பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.