திருச்செங்கோடு அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
திருச்செங்கோடு அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியானார்.
தொழிலாளி
திருச்செங்கோடு அருகே ஒக்கிலிபட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா (23). இவர்களுக்கு கவின் (6) என்ற மகனும், நிரஞ்சனா (3) என்ற மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கவிதா நேற்று வீட்டில் துணிகளை துவைத்து உள்ளார். பின்பு அருகில் உள்ள ரங்கசாமி என்பவரது வீட்டின் மாடியில் உள்ள கம்பியில் துணிகளை காய வைக்க சென்றார். அப்போது கம்பியில் துணியை போட்டபோது எதிர்பாராதவிதமாக கவிதாவை மின்சாரம் தாக்கியது.
விசாரணை
இதில் சுருண்டு விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=========