இருதரப்பினர் இடையே மோதல்; பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு
இருதரப்பினர் இடையே மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் தனம்(வயது 60). அதே பகுதியைச் சேர்ந்தவர் கவிதா(26). இடம் சம்பந்தமாக இவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று கவிதா, தனம் ஆகியோர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பை சேர்ந்த சிலர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தனம் மற்றும் கவிதா ஆகியோர் தா.பழூர் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். இதில் தனம் அளித்த புகாரின்பேரில் கவிதா (26), தங்கமணி (60), சாமிதுரை (65) ஆகியோர் மீதும், கவிதா அளித்த புகாரின்பேரில் கருணாமூர்த்தி (43), கனிமொழி (35) தனம் (60), சின்னப்பா (55) ஆகியோர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.