ராமநாதபுரம் அருகே உள்ள புதுக்கோவில் வில்லிவலசை பகுதியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது41). இவரது 3 வயது மகன் கவின் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த கவின் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். இதுகுறித்து முத்துக்கருப்பன் அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய சக்கரக்கோட்டை தலையாரியான கே.கே.நகர் மாடசாமி மகன் மோகன்தாஸ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.