காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளதால் அன்றையதினம் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது. அன்று மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
----------------