மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Update: 2021-09-30 13:59 GMT
பந்தலூர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே உள்ள கொல்லம்வயல் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் சிப்ரன்(வயது 55). கூலி தொழிலாளி. இவர் அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு நேற்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது அங்கு அறுந்து கீழே கிடந்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக மிதித்ததாக தெரிகிறது. 

இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிப்ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எருமாடு போலீசார் விரைந்து வந்து, சிப்ரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்