ஊரப்பாக்கத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய 7 பேர் மீது வழக்கு

ஊரப்பாக்கம் ஊராட்சியில் அனுமதி இல்லாமல் சின்னத்தை பிரிண்ட் செய்த சுவரொட்டிகளை ஒட்டி வைத்திருந்தனர். கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-09-30 11:47 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி பிரமுகர்கள், சுயேச்சை வேட்பாளர்கள், போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் குறித்து வாக்காளர்கள் இடையே கொண்டு செல்வதற்காக பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அதில் தங்களது புகைப்படத்துடன், சின்னங்களை பிரிண்ட் செய்து முக்கியமாக வாக்காளர்கள் அதிக அளவில் செல்லும் பொது இடங்களில் உள்ள சுவர்களில் சுவரொட்டிகளாக ஒட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஊரப்பாக்கம் ஊராட்சியில் அனுமதி இல்லாமல் அரசு மேம்பாலம் பக்கவாட்டு சுவர் பகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேர் தங்களது புகைப்படத்துடன், சின்னத்தை பிரிண்ட் செய்த சுவரொட்டிகளை ஒட்டி வைத்திருந்தனர். அரசு மேம்பாலங்களில் சுவரொட்டிகள் ஒட்டியதாக அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க.வை சேர்ந்த 7 பேர் மீது கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்