ஏ.டி.எம். பணம் ரூ.3 கோடி கையாடல்; 3 பேர் கைது

ரூ. 3 கோடி கையாடல் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-29 21:41 GMT
கோலார்: கோலார் டவுனில் வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கோலார் டவுனை சேர்ந்த கங்காதர், சுனில்குமார், பவன்குமார் மற்றும் முரளி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் வங்கிகளில் பணம் பெற்று, அதனை ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 இவ்வாறு வங்கிகள் வழங்கும் பணத்தை முறையாக ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பாமல் கையாடல் செய்து வந்துள்ளனர். இது வங்கிகளின் கணக்கு தணிக்கையின் போது கண்டறியப்பட்டது. இதையடுத்து வங்கிகளின் நிர்வாகத்தினர் கோலார் சைபர் கிரைம் போலீசில் புகாார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தினர்.

 இதற்கிடையே 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கங்காதர், சுனில்குமார், பவன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான முரளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்