அர்ச்சகர் வீட்டில் 650 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு
ராஜபாளையத்தில் அர்ச்சகர் வீட்டில் 650 கிராம் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் அர்ச்சகர் வீட்டில் 650 கிராம் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
அர்ச்சகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சக்கராஜா கோட்டை பகுதியில் வசிப்பவர் சீனிவாசன் (வயது 67). ஒரு கோவிலில் அர்ச்சகராக இருந்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு கோவில் பூஜைக்கு சென்றார். பின்னர் விஷ்ணு நகரில் அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்தநிலையில் சக்கராஜா கோட்டையில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
650 கிராம் வெள்ளி பொருட்கள்
அதன் பேரில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்தது. மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவையும் கம்பியால் உடைத்து பீரோவில் வைத்திருந்த 650 கிராம் வெள்ளி பொருட்களையும், 2 குத்து விளக்குகளையும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுபற்றி சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.