சாய்ந்த நிலையில் மின் கம்பம்

சாய்ந்த நிலையில் மின் கம்பம்

Update: 2021-09-29 21:10 GMT
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சித்தாதிகாடுலிருந்து அம்மையரண்டி செல்லும் இணைப்பு சாலையில் உயர் மின் அழுத்த கோபுரம் உள்ளது. அதன் அருகே உள்ள ஆற்று மணலை அள்ளியதால் மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதன் அருகே அம்புளி ஆற்றில் புதிய பாலம் கட்டுமானம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மின் கம்பம் எந்த நேரமும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மின் வாரிய அதிகாரிகள் மின் கம்பம் விழாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் தேப்பெருமாநல்லூர்-சன்னாபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், ஆடுதுறை, மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றனர். மேலும், இந்த சாலை வழியாக தான் 5-க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் தேப்பெருமாநல்லூர்சன்னாபுரம் சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேப்பெருமாநல்லூர்-சன்னாபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

கும்பகோணம் காந்தி பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளது. இரும்பு பைப்புகள் துருபிடித்து பெயர்ந்தும் உடையக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ளது. பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்கள் பழுதாகி உள்ளதால் பொதுமக்கள் பூங்கா வருவதை பெரிதும் தவிர்த்து வருகிறார்கள். மேலும் கும்பகோணம் நகர வாசிகளுக்கு பொழுபோக்கான பூங்கா என்பதால் இதனை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கோவிந்த நாட்டுச்சேரி அருகே உள்ளது நாயக்கர்பேட்டை கிராம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்கள் கிராமத்தில் ஆடுகள் அதிகஅளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள தெருநாய்கள் ஆடுகளை கடிப்பதால் அடிக்கடி இறக்கின்றன. இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே தெரு நாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்