பயிற்சி முகாம்

சிவகாசி யூனியன் அலுவலகத்தில் களநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2021-09-29 21:01 GMT
சிவகாசி, 
மத்திய அரசு சார்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர ஜல்ஜீவன் மிஷன் என்ற அமைப்பை தொடங்கி அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் குடிநீர் வசதி செய்து தர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சிவகாசி யூனியன் அலுவலகத்தில் களநீர் பரிசோதனை மற்றும் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதை யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பஞ்சாயத்துக்களின் செயலர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் பஞ்சாயத்து பகுதியில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரின் தரம் குறித்த ஆய்வுகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து விளக்கப்பட்டது. முடிவில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் தண்ணீரின் தரம் அறிய உதவும் கருவிகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்