சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள், வருவாய் கிராம ஊழியர் சங்க நிர்வாகிகள், சத்துணவு அங்கன் வாடி ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.