மதுபாட்டில்கள் திருடிய 3 பேர் கைது
மதுபாட்டில்களை திருடிய 3 பேரை கைது செய்தனர்.
காரியாபட்டி,
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஏ.முக்குளம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த மே மாதம் 25-ந் தேதி ரூ.3 லட்சம் மதிப்பிலான 4,500 மதுபாட்டில்கள் திருட்டு போனது. இதுகுறித்து ஏ.முக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம நாராயணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் மதுரைபெருங்குடியை சேர்ந்த கல்லணை என்ற அய்யனார் (வயது 28), அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல்லை சேர்ந்த விஜி (31), மதுரை பெருங்குடியைச் சேர்ந்த நாகராஜ் (24) ஆகிய 3 பேரும் மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஏ.முக்குளம் போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.