100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற ஒன்றியமாக மாறிய மணிகண்டம்
100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற ஒன்றியமாக மணிகண்டம் ஒன்றியம் மாறியுள்ளது. பள்ளி செல்லா 4,057 முதியவர்கள் கையெழுத்து போட கற்று கொண்டனர்.
திருச்சி, செப்.30-
100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற ஒன்றியமாக மணிகண்டம் ஒன்றியம் மாறியுள்ளது. பள்ளி செல்லா 4,057 முதியவர்கள் கையெழுத்து போட கற்று கொண்டனர்.
எழுத்தறிவு இயக்கம்
மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முழு எழுத்தறிவு இயக்கத்தை கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதையடுத்து மணிகண்டம் ஒன்றிய ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்களால் எழுத்தறிவு இயக்கம் நடத்தப்பட்டு 4,057 பள்ளி செல்லா முதியோருக்கு கையெழுத்து போட கற்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி அங்குள்ள 120-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் சுமார் 300 தெருக்களில் நடைபெற்றது. ஒரு தெருவுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பொறுப்பு எடுத்து கொண்டு, அங்குள்ள முதியோருக்கு எழுத்தறிவு கற்று கொடுத்துள்ளனர். இதில் இன்னும் 1,343 பேர் மாற்றுத்திறனாளிகள், கை பிடிக்க இயலாத மூத்தோர் உள்ளனர். அவர்களை தவிர, மணிகண்டம் ஒன்றியத்தில் கையெழுத்திட தெரியாதவர்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியறிவை பொறுத்தவரை தமிழகம் 81 சதவீதம் பெற்றுள்ளது. இதனை 100 சதவீதமாக உயர்த்த அடுத்த 3 ஆண்டுகளில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கடந்த ஜூலை மாதம் நடந்த எழுத்தறிவு இயக்க தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இதற்கு முன்மாதிரியாக மணிகண்டம் ஒன்றியத்தில் எழுத்தறிவு இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வு எழுத வைக்க திட்டம்
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் கூறும்போது, "மணிகண்டம் ஒன்றியத்தில் பள்ளிக்கே செல்லாத 8 ஆயிரம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு நிர்ணயித்து கடந்த ஜூலை மாதம் முதல் பணியாற்றி வந்தோம். இதில் கொரோனா காலகட்டத்தில் 1000 பேர் வரை இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்களில் 4,057 பேருக்கு கையெழுத்து கற்பிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 800 பேர் வாசிக்கவும் கற்று கொண்டுள்ளனர்.
இதையடுத்து பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்டோ அல்லது கல்லூரி ஆசிரியர்களை கொண்டோ எழுத்தறிவு இயக்கத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துவிட்டு, அதன் அறிக்கையை விரைவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்க உள்ளோம். இதன் மூலம் மணிகண்டம் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற ஒன்றியம் என்பதை உறுதி செய்யப்படும்" என்றார். மேலும், எங்களது அடுத்த இலக்காக எழுத்தறிவு பெற்ற முதியவர்களில் 100 பேரையாவது திறந்தநிலை தேர்வுகளை எழுத வைக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.