சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாவட்ட போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர்,
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் மாவட்ட சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு சமூக உரிமைகள் பாதுகாப்பு கழக நிறுவனர் வடிவேல் தலைமை தாங்கினார். சசிகலா வரவேற்றார்.
இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
துண்டு பிரசுரம் வினியோகம்
கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீசார் போன்று வேடமணிந்த இளைஞர்கள் நடனமாடி வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்தும், அதிவேகமாக வாகனம் ஓட்டுவது மற்றும் மதுஅருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து போலீசார் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் வாகனங்களில் முன்பக்க விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை கரூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் செய்திருந்தார்.