திருச்செந்தூர் அருகே பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை

திருச்செந்தூர் அருகே பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-09-29 14:51 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி முந்திரி தோட்டத்தை சேர்ந்த சித்திரைபாண்டி மனைவி விஜயலட்சுமி (வயது 48). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் அபிமாலா (27) பி.ஏ., பி.எட்., படித்துள்ளார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயிற்று வலி அதிகமானதால் வலி தாங்க முடியாமல் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்