தி.மு.க. நிர்வாகி மதுபானக்கூடம்-2 கடைகளுக்கு சீல்
தி.மு.க. நிர்வாகியின் மதுபானக்கூடம்-2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தஞ்சாவூர்;
தி.மு.க. நிர்வாகியின் மதுபானக்கூடம்-2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
குத்தகை நிலம்
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுரஅடி காலி இடம் சுதர்சன சபாவிற்கு ஆண்டு வாடகையாக குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் சுதர்சன சபாவினர் குத்தகை நிபந்தனைகளுக்கு மாறாக மேற்படி இடத்தின் ஒரு பகுதியை 29 ஆயிரத்து 747 சதுர அடி இடத்தை தனியார் ஒருவருக்கு உள்வாடகைக்கு விட்டு அதில் கட்டிடம் கட்டி ஓட்டல் நடத்த அனுமதி அளித்தது.
அந்த இடத்தில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வந்தது. அதற்காக ஓட்டல் நிர்வாகம் சுதர்சன சபாவிற்கு வாடகை செலுத்தி வந்தது. இந்த ஓட்டலை கடந்த 22-ந் தேதி மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
மதுபானக்கூடம்
மேலும் சுதர்சன சபா நிர்வாகம் மாநகராட்சியின் அனுமதியின்றி தி.மு.க. நிர்வாகிக்கு உள்வாடகைக்கு விட்டு, 1,628 சதுரஅடி இடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மதுபானக்கூடம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதை ஒட்டியுள்ள பகுதியில் செல்போன் கடை, பேக்கரியும் நடத்தப்பட்டு வந்தது.
மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மதுக்கூடம், செல்போன் கடை, பேக்கரி ஆகியவை நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடங்களை பூட்டி ‘சீல்’ வைக்கப்போவதாக மாநகராட்சி சார்பில் கடந்த மாதம் 13-ந் தேதி அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில் செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் கண்ணதாசன், ஆறுமுகம், மகேந்திரன், பாபு மற்றும் வருவாய் உதவி அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று காலை மதுபானக்கூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றை பூட்டிசீல் வைத்தனர்.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே குத்தகைக்கு விடப்பட்டு முடிவடைந்த தியேட்டர், லாட்ஜ், மற்றும் கிளப் போன்ற கட்டிடங்களை மாநகராட்சி கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது மதுபானக்கூடம், பேக்கரி, செல்போன் கடைக்கு ‘ல் வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.