மோட்டார்சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்தவர் கைது
ஆழ்வார்குறிச்சியில் மோட்டார்சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஆம்பூரில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்தனர். விசாரணையில், கருத்தப்பிள்ளையூர் அந்தோணியார் தெருவை சேர்ந்த அமல்ராஜ் (வயது 55) என்பதும், விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து விற்பனைக்காக மோட்டார்சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அமல்ராஜை கைது செய்து, அவர் வைத்திருந்த 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.