போதிய விலை இல்லாததால் பூக்களை ஆற்றில் கொட்டிய விவசாயிகள்
மணப்பாறையில் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பூக்களை ஆற்றில் கொட்டினர்.
மணப்பாறை, செப்.29-
மணப்பாறையில் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பூக்களை ஆற்றில் கொட்டினர்.
பூக்கள் சாகுபடி
மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியங்களில் வசிக்கும் மக்களின் பிரதான தொழில் விவசாயம். இதுமட்டுமின்றி மலர் சாகுபடியும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் அறுவடையாகும் பூக்களை மணப்பாறை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக பூ சாகுபடி செய்த விவசாயிகள் பூக்கள் விலை போகாததால் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். பூக்களுக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலையில் இந்த ஆண்டாவது ஏதாவது கடனை கட்டி விடலாம் என்று நினைத்து அதிக அளவில் பூ சாகுபடி செய்து இருந்தனர்.
இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வெள்ளி, சனி, ஞாயிறுஆகியநாட்களில்வழிபாட்டுதலங்களைபூட்டஉத்தரவிடப்பட்டுள்ளதுடன், திருவிழா நடத்தவும்தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூக்களை வாங்க யாரும் முன்வராததால் விலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பூக்களை ஆற்றில் கொட்டிய விவசாயிகள்
வழக்கம்போல் நேற்று விவசாயிகள் மணப்பாறை பூமார்க்கெட்டிற்கு கொண்டு வந்தனர். ஆனால் பூக்களின் விலை மிகவும் குறைந்திருந்ததால் மிகுந்த வேதனைக்கு ஆளாகினர். கேந்திப் பூக்கள் வழக்கமாக ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையாகும். ஆனால் நேற்று ரூ.2-க்கு மட்டுமே விலை போனது.
இதே போல் பிச்சிப்பூ, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களும் குறைவான விலைக்கே போனது. இதனால் கூலிக்கும், வாகனத்திற்கும் கூட கட்டுபடியாகாத நிலையில் மிகுந்த வேதனைக்கு ஆளான விவசாயிகள் கண்ணீரோடு சென்று மான்பூண்டி ஆற்றில் சுமார் ஒரு டன்னிற்கும் அதிகமான பூக்களை கொட்டிச் சென்றனர்.
அரசு உதவிட கோரிக்கை
மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கடந்த சில வருடங்களாக கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கஜா புயல், கொரோனா என மாறி, மாறி வரும் சூழ்நிலையாலும், உரங்கள் மற்றும் விவசாய விளைபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டதாலும் வாங்கிய கடனை எப்படி செலுத்தப்போகிறோம் என்று கவலையுடன் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.