மோகனூர் அருகே 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்-5 பேர் காயம்

மோகனூர் அருகே 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-09-28 19:17 GMT
மோகனூர்:
வாகனங்கள் மோதல்
மோகனூர் அருகே என்.புதுப்பட்டியில் நாமக்கல்-திருச்சி சாலையில் பேக்கரி ஒன்று உள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு சரக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோவை சாலையோரம் நிறுத்திவிட்டு பேக்கரியில் டீ குடிக்க சென்றார். 
அப்போது திடீரென நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி செங்கல் பாரம் ஏற்றி சென்ற லாரி ஒன்று சரக்கு ஆட்டோ மீது மோதியது. லாரி மோதிய வேகத்தில் சரக்கு ஆட்டோ முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
5 பேர் காயம்
இதனிடையே பின்னால் டிராக்டர் மற்றும் காய்கறிகளை ஏற்றி வந்த 2 லாரிகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய லாரி மீது மோதின. இந்த விபத்தால் லாரி ஒன்று பேக்கரிக்குள் புகுந்தது. மேலும் ஒரு லாரி கார் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் சிக்கி டிரைவர்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். நாமக்கல்-திருச்சி சாலையில் 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்