கல்லூரி மாணவி விஷம் தின்று தற்கொலை
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை:
மாணவி தற்கொலை
புதுக்கோட்டை மாலையீடு பகுதியை சேர்ந்த சுப்ரமணியன். இவரது மகள் சந்தியா (வயது 20). தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் அவர் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சந்தியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.