பிளஸ்-2 மாணவி பலாத்காரம்
பண்ருட்டி அருகே பிளஸ்-2 மாணவி பலாத்காரம் செய்த காதலன் கைது செய்யப்பட்டாா்.
கடலூர்,
பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவன், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறான். இவனுக்கும், அதே பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியதாக தெரிகிறது.
இதற்கிடையே அந்த மாணவன் பாடத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனை அந்த மாணவியிடம் கேட்டு தெரிந்து கொள்ள அவரது வீட்டுக்கு சென்று வருவதாகவும் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு அடிக்கடி சென்று வந்துள்ளான். இந்த நிலையில் சம்பவத்தன்றும் அந்த மாணவன், படிப்பதற்காக மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளான். அப்போது மாணவியின் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் இருவரும் தனிமையில் இருந்த போது அந்த மாணவன் ஆசை வார்த்தை கூறி மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். இதுபற்றி மாணவி, தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். மேலும் இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர்.