இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Update: 2021-09-28 16:18 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள சொலவம்பாளையத்தில் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 9 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். 

ஒற்றையர், இரட்டையர் மற்றும் வயது அடிப்படையில் மொத்தம் 17 பிரிவுகளில் போட்டி நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. 

இதில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, கிணத்துக்கடவு துணை தாசில்தார் ராமராஜ், எல்.ஜெ.ஜெ.ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்