தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் துணிக்கடை உரிமையாளர் தற்கொலை

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் துணிக்கடை உரிமையாளர் தற்கொலை

Update: 2021-09-28 16:18 GMT
பொள்ளாச்சி

ஆனைமலையை சேர்ந்தவர் மருதநாயகம் (வயது 64). இவர் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கொரோனா காரணமாக போதிய வியாபாரம் இல்லை. 

இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தொழிலுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மருதநாயகம் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மருதநாயகம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்