போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-09-28 13:16 GMT
திண்டுக்கல்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் திண்டுக்கல் நாகல்நகர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும். மருத்துவப்படியை ரூ.300 ஆக உயர்த்த வேண்டும். மேலும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

 குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் வழங்க வேண்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்