வியாபாரி பலி

மாடியில் இருந்து தவறிவிழுந்து சோப்பு வியாபாரி பலி

Update: 2021-09-27 17:48 GMT
ராமநாதபுரம், 
தேனி  மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சர்க்கரை என்பவரின் மகன் ஜெயக்குமார் (வயது35). இவர் ராமநாத புரம் சாயக்காரத்தெரு பகுதியில் மாடி ஒன்றில் தங்கியிருந்து சோப்பு மற்றும் வாசிங் பவுடர் ஆகியவற்றை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததால் அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால் தவறிவிழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தநிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக் கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.

மேலும் செய்திகள்