வீட்டை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
வீட்டை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
பந்தலூர்
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே குழிவயல், புஞ்சைகொல்லி, சப்பந்தோடு ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு ஆகிய பயிர்களை பயிரிட்டுள்ளனர். அந்தபயிர்களை காட்டுயானைகள் உடைத்து மிதித்து நாசம்செய்துவருகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 5 காட்டுயானைகள் குட்டிகளுடன்புகுந்தது. புஞ்சை கொல்லிபகுதியில் விவசாயபயிர்களை உடைத்து மிதித்து சேதப்படுத்தியது. பிறகு அங்கிருந்து நகர்ந்த காட்டு யானைகள் குழிவயல் ஆதிவாசி காலனிக்குள் புகுந்தது. அப்போது பொம்மி என்பவரின் வீட்டை காட்டுயானைகள் உடைத்தது சத்தம்கேட்டு வீட்டிலிருந்தவர்கள் தப்பி ஓடி உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.
இதுபற்றிசம்பவம் அறிந்தசேரம்பாடி வனகாப்பாளர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும்வேட்டைதடுப்புகாவலர்களும் வந்து காட்டுயானைகளை காட்டுக்குள் விரட்டிஅடித்தனர்.