2 பெண் தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு

2 பெண் தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு

Update: 2021-09-27 17:31 GMT
பேரணாம்பட்டு

பேரணா பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வருகிற 6-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. பேரணாம்பட்டு ஒன்றியத்திலுள்ள 24 ஊராட்சிகளில் உள்ள 213 வார்டு உறுப்பினர்களுக்கு 671 பேரும், 15 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 77 பேரும், 2 மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 130 பேரும் என மொத்தம் 890 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து, வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.டி. பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட கொத்தப்பல்லி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர் ரோஜா (வயது 44) என்பவர் மட்டுமே போட்டியிட வேட்பு மனுத் தக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று எஸ்.டி. பெண்கள்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட அரவட்லா ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் 2 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் விவசாய தொழிலாளியான ராஜகுமாரி (50) உளராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோன்று ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 25 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்