மனைவியை அடித்துக்கொலை செய்த கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை-கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை அடித்துக்கொலை செய்த கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-09-27 16:55 GMT
கிருஷ்ணகிரி:
கட்டிட மேஸ்திரி
கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 60). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி அமுதா (45). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 31.7.2017 அன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த முனியப்பன் அமுதாவை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொலை தொடர்பாக அப்போதைய கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் அன்புமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி முனியப்பனை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா நேற்று தீர்ப்பு கூறினார். 
அதில் குற்றம் சாட்டப்பட்ட முனியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்