திருக்கோவிலூர் அருகே மினி லாரி டிரைவரிடம் ரூ 73 ஆயிரம் பறிமுதல்

திருக்கோவிலூர் அருகே மினி லாரி டிரைவரிடம் ரூ 73 ஆயிரம் பறிமுதல்

Update: 2021-09-27 16:37 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவி கொளப்பாக்கம் கிராமத்தில் நேற்று திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, திருக்கோவிலூர் அருகே உள்ள டீ குன்னத்தூர் கிராமத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி, அதை ஓட்டி வந்த  கிருஷ்ணமூர்த்தி மகன் பச்சமுத்து என்பவரிடம் விசாரித்து, சோதனை செய்தனர். அதில், அவர் ரூ.73 ஆயிரத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை  திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல்கலைச்செல்வியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்