சாலையோரம் கொட்டப்படும் திண்பண்டங்கள்

சாலையோரம் கொட்டப்படும் திண்பண்டங்கள்

Update: 2021-09-27 12:42 GMT
தாராபுரம் 
தாராபுரத்தில் காலாவதியான தின்பண்டங்களை சாலையோரங்களில் மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் நாச்சிமுத்து புதூர் நகர் அருகே பல மாதங்களான காலாவதியான ஜிலேபி, மைசூர்பா, லட்டு போன்ற தின்பண்டங்களை மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். அப்பகுதியில் கொட்டிக்கிடக்கும் தின்பண்டங்களை நாய்களும். பூனைகளும் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் எடுத்து உண்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அப்பகுதியில் கிடக்கும் காலாவதியான தின்பண்டங்களை சாலையோரம் கொட்டும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்